நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 7 பேர் பலி
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இதுவரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பருவமழைக் காரணமாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஊருக்குள் புகுந்த ஆற்றுநீர் பலரை அடித்துச் சென்றது.
அடித்துச் சென்றவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
இந்த வெள்ளத்தால் மின் கம்பங்கள், பாலங்கள், வீதிகள் என அனைத்து விதமான தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.