நெருக்கடி நிலையில் களுபோவில மருத்துவமனை!
கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் உள்ள 7 வார்ட் அறைகளில் 300இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை தற்போது உச்ச அளவில் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமன்றி பணிக்குழாமில் 30 பேர்வரை தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.