நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
செலவு, வரவை விட அதிகரித்துள்ளமையினால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கடுமையாக பொருளாதார செருக்கடியை சந்தித்துள்ளதாக அந்தச் சங்கத்தின் பொது முகாமையாளர் திலி ண விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செயவதேற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீர்கட்டணத்தை அதிகரிப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் அறிவித்துள்ளது.
கடந்த 40 வருடங்களில் நாட்டு மக்கள் தொகையில் நூற்றுக்கு 45 வீதம் நீர் விநியோகம் இடம்பெற்றுள்ளதுடன் எதிரவரும் நான்கு வருடிங்களில் நூற்றுக்கு 80 வீதம் வரையில் அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.