நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள்
தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டின் சில பகுதிகளுக்கும், உயர்நிலப் பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீரை விநியோகிக்க நேரிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அந்தச் சபை அறிவுறுத்தியுள்ளது.
வறட்சியான காலநிலைக் காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
அதேநேரம், குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால், வாகனங்களைக் கழுவுதல், வீட்டுத்தோட்டம் உட்பட ஏனைய பயிர்செய்கைகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.