நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் மாயம்- தேடும் பணிகள் தீவிரம்
மட்டக்களப்பு-வாழைச்சேனை கிரான் சின்னவெம்பு கடல் பகுதியில் நீராடச் சென்ற நிலையில், காணாமல்போன இரண்டு சிறுவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்று (14) பிற்பகல் 15 மற்றும் 16 வயதான இரண்டு பாடசாலை மாணவர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மூன்று சிறுவர்கள் குறித்த கடல் பகுதியில் நீராடியபோது, அவர்கள் மூவரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, விரைந்து செயற்பட்ட பிரதேச மக்கள் ஒரு சிறுவனை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சிறுவர்களைத் தேடும் பணிகளில், பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.