நியுசிலாந்து 144 ஓட்டங்கள் சதத்தை தவறவிட்டார் ஸ்டோக்
இங்கிலாந்து நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கை நேரப்பட்ட இன்று காலை 11 மணிக்கு நிறைவுக்கு இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், தனது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் நியுசிலாந்து அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நியுசிலாந்து துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார், ஹென்ரி நிக்கலஸ் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
முன்னதாக தனது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 353 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து துடுப்பாட்டத்தில், பென் ஸ்டோக் 91 ஓட்டங்களையும், ஜோ டென்லி 74 ஓட்டங்களைம் பெற்றுக்கொடுத்தனர்.
நியுசிசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுதி 4 விக்கெட்டுக்களையும், நெய்ல் வோக்னர் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.