நிதியமைச்சு பதவியை வகிக்க பெசிலுக்கு தகுதியில்லை – விஜயதாச எம் பி
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் போன்று நிதியமைச்சர் பதவியையும் வகிக்க பெசில் ராஜபக்ஷவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு அமெரிக்க பிரஜையான பெசில் ராஜபக்சவுக்கு உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக பெசில் ராஜபக்ஷவை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.