நாளாந்தம் 25,000 கொரோனா பரிசோதனைகள் முன்னெடுப்பு- சுகாதார அமைச்சர்
நாளொன்றுக்கு சுமார் 25,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு, எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களுக்காக மேலதிகமாக 10,000 கட்டில்களை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.