நானுஓயாவிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு!
நானுஓயா கிலாரண்டன் மேற்பிரிவில் இன்று (7) காலை எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த அடுப்பு வெடித்துள்ளது.
இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை எனவும் சமையலறைக்கும், சமையல் பாத்திரங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நானுஒயா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டி.சந்ரு செ.திவாகரன்