நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக சில இடங்கள் குறித்து அவதானம் – சரத் வீரசேகர
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் போது, சில இடங்கள் குறித்து இடைக்கிடை அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
போபிட்டி பகுதியிலுள்ள தேவாலயம் குறித்து, கடற்படை அதிகாரியொருவர் அண்மையில் தேவாலயத்திற்கு அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.