நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு – தெற்கு என்ற பேதம் இல்லை – பிரதமர்
நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று காலை (01) அலரி மாளிகையில் வைத்து தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2005 – 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியின் போதே பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதனை இதன்போது நினைவுப்படுத்திய பிரதமர், அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டுவரும் திட்டங்களில் தங்கள் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் எனவும் பிரதமர் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பில் மீன்வள மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட மேலும் பல விடயங்களை எமது நாளைய ‘தமிழன்’ பத்திரிகையில் எதிர்பாருங்கள்.