நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு
நாடாளுமன்ற அமர்வு தற்சமயம் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பத்தரமுல்லை – தியத்த உயனவிலிருந்து பாதுகாப்புத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் சில நுழைவாயில் பகுதிகளிலும் பொலிஸ் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும், விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ், எந்தவொரு வீதியையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.