நண்பனுக்காக பரீட்சை எழுத முற்பட்ட மற்றுமொரு நபர் கைது
பலாங்கொடை பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட வேறு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய மொழி பரீட்சையில் நண்பருக்காக முன்னிலையானமை தொடர்பில் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.