நடிகர் விஜய் தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை இரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காருக்கு 7 இலட்சத்து 98,075 ரூபா நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில், இடைப்பட்ட காலத்திற்கு 30 இலட்சத்து 23,000 ரூபா அபராதமாக செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.