நடமாடும் தடுப்பூசி நிலையங்களை நிறுவ சுகாதார அமைச்சு நடவடிக்கை
கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை மக்களுக்கு வழங்குவதற்காக நடமாடும் தடுப்பூசி நிலையங்களை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேவைக்கு ஏற்ப குறித்த நடமாடும் நிலையங்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை பிரதான மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளிடமிருந்து (MOH) பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.