தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் – நிமல் சிறிபால டி சில்வா
நீண்டகாலமாக தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தில் நேற்று (25) இடம்பெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அத்தோடு தொழில்புரியும் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பல தடைகள் காணப்படுகின்றன. அவற்றை நீக்குவதற்காக வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.