தேவாலயத்தில் தாக்குதல் – அறுவர் பலி
ஆப்பிரிக்க நாடான பார்க்கினோ ஃபாசோவில் துப்பாக்கிதாரிகள் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வடக்கு டப்லோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் தேவாலயத்தின் போதகர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 5 வாரங்களில் பார்கினோ ஃபாசோவில் நடத்தப்படும் 3வது கிறிஸ்த்தவ தேவாலயம் மீதான தாக்குதல் இதுவாகும்.