தென் கொரியாவில் கொரோனா தீவிரம்
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா நிலைமையுடன் நாட்டில் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த மாதத்திலிருந்து இயழ்பு நிலைக்கு திரும்பியிருந்த நிலையிலேயே இவ்வாறு தொற்று நிலைமை அதிகரிததுள்ளது.
நேற்று மாத்திரம் 3 ஆயிரத்து 292 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா பரவல் நிலை ஆரம்பமாகியதன் பின்னா் ஒரு நாளில் அடையாளம் காணப்பம் அதிகளவான கொரோனா நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனா்.
இதுவரையில் தென் கொரியாவின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 82 சதவீதம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.