திருமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய பிரஜை காயம்
திருகோணமலை-உப்புவெளி 3ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (13) மதியம் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது
குறித்த விபத்தில் பி.பி.ஏ.ஏ தமித்திரி (வயது-28) என்ற குறித்த ரஷ்ய நாட்டு பிரஜை திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், இன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த ரஷ்ய நாட்டு பிரஜை திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரவ்பீக் பாயிஸ்