திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதியில் விபத்து
திருகோணமலை-ஹொரபொத்தானை பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் முற்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல பகுதியிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவரை பார்வையிடச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கோமரங்கடவல- மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 52 வயதுடைய இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பதுர்தீன் சியானா