தலவாக்கலையில் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.
அந்தவகையில் தலவாக்கலை நகரிலும் பிரதேச மக்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தலவாக்கலை நகர வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
தலவாக்கலை நிருபர்
தலவாக்கலையில் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் pic.twitter.com/clv8gdQalg
— Thamilan News (தமிழன்) (@thamilannews) May 6, 2022