தமிழ் குடும்பநல உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு வடிவேல் சுரேஸ் எம்.பி சபையில் கோரிக்கை
பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி தமிழ் மொழி பேசும் குடும்பநல உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் சற்றுமுன் கோரிக்கை முன்வைத்தாா்.
2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தாா்.
மொழிப் பிரச்சினையின் காரணமாக பெருந்தோட்டங்களை சேர்ந்த மக்கள் தமது சுகாதார பிரச்சினைகளை நிவரத்தி செய்து கொவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினாா்.