தமிழர்களின் கன்னியா உரிமைப்பேராட்டத்திற்கு தடை விதித்தது பாதுகாப்பு தரப்பு – நீதிமன்றத்தில் தடை அனுமதியை பெற்றது
திருகோணமலை – கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயத்தை பாதுகாக்க வலியுறுத்தி இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் நீதிமன்றத் தடை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடுமையான பொலிஸ், இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டதால் மக்கள் வீதிகளில் அமர்ந்து வழிபாட்டுடன், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, போராட்டத்திற்கும், அங்கு பௌத்த விகாரை கட்டத் தடையும் விதிக்கப்பட்டதாக பொலிஸாரால் சிங்களத்தில் எழுதப்பட்ட ஆவணங்கள் காண்பிக்கப்பட்ட போதும் அதனை மக்கள் ஏற்க மறுத்திருந்தனர்.