தனியார் பஸ் சாரதிமார் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு
தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் சிரமங்களுக்கு மத்தியில் வாழும் தனியார் பஸ் சாரதிமார் , நடத்துனர்களுக்கு விசேட கொடுப்பனவாக ஐயாயிரம் ரூபாவை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மின், எரிசக்தி மற்றும் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.