தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் மற்றுமொரு பகுதி
கொழும்பு மாவட்டத்தில் மற்றொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.