தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி – குற்றம் சுமத்துகிறார் மைத்திரி
தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
கேகாலையில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…
தகவல் அறியும் சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது கவலையளிக்கின்றது, கூட்டணியொன்றை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு அதனை ஏற்படுத்தியவர்களிடமே உள்ளது எனவே அதனை சரிவர நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டணி பிளவுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.