டீ ஐ ஜி நந்தன முனசிங்கவிடம் இன்று விசாரணை !
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் தொடர்பாக இடமாற்றம் செய்யப்பட்ட வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சீனியர் டி.ஐ.ஜி.நந்தன முனசிங்க பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு இன்று நீண்டநேரம் விசாரிக்கப்பட்டார்.
அந்த தாக்குதலின் போது முனசிங்க மேல் மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்தார்.
பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவின் டி.ஐ.ஜி மேவன் டி சில்வாவினால் இவர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.