டில்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித் காலமானார்
இந்தியாவின் புதுடில்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித் காலமானார். அவருக்கு வயது 81. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் டில்லி முதல்வராக இருந்துள்ளார். சில ஆண்டுகள் கேரள கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், டில்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த ஜனவரி 10ம் தேதி டில்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1938 மார்ச் 31ல் பஞ்சாபின் கபுர்தலா என்ற இடத்தில் பிறந்தார். டில்லியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், டில்லி பல்கலையில் வரலாற்று பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.