தமிழ்நாட்டில் டிக்டொக்கால் சேர்ந்த குடும்பம்
3 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன கணவரை தமிழகம் விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டிக்டொக் செயலியில் கண்டுபிடித்துள்ளார்.
2016ம் ஆண்டு குறித்தப் பெண்ணை விட்டுச் சென்ற கணவர், ஓசூரில் மூன்றாம்பாலினத்தவர் ஒருவருடன் வசித்து வந்துள்ளார்.
குறித்த மூன்றாம் பாலினத்தவரால் டிக்டொக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில் தமது கணவரை அடையாளம் கண்டுக் கொண்ட பெண், காவற்துறைக்கு தகவல் வழங்கினார்.
பின்னர் காவற்துறையினர் இந்திய மூன்றாம் பாலினத்தவர்கள் சங்கத்தின் உதவியுடன் அவரை கண்டுபிடித்து இருவரையும் ஒன்று சேர்த்துள்ளனர்.
தற்போது அவர்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.