ஜப்பான் கடற்பகுதியில் 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரியா அறிவிப்பு
ஜப்பான் கடல் பகுதியில், வடகொரியா 3 ஏவுகணைகளை சோதனை செய்து பார்த்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் வடகொரியா நடத்திய 16ஆவது ஏவுகணை பரிசோதனை இதுவாகும்.
வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால் அங்கு ஊரடங்கு பிரகடனப் படுத்தப்பட்டதன் மத்தியில், இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.