ஜனாதிபதி வருகை ஆடம்பர செலவுகள் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அறிவிப்பு
எளிமையான முறையில் பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி, 9ஆவது நாடாளுமன்ற ஆரம்ப நிகழ்வை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆரம்ப நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, புதிய நாடாளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி வருகை, ஆடம்பர செலவுகள் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு, இராணுவ மற்றும் குதிரை அணி வகுப்பு உட்படப் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
மேலும், இராணுவ அணிவகுப்பு, பாதுகாப்பு அணிவகுப்பு மற்றும் நாடாளுமன்ற வீதியின் இருபுறமும் இராணுவ அணி வகுப்பு செலுத்துமாறு நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அந்தவகையில் இம்முறை குதிரை அணிவகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.