ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வினை காண்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படவுள்ளது.
மேலும், குறித்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.