சூர்யாவுடன் இணையும் கர்ணன் திரைப்பட நாயகி
சூர்யா தயாரித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளார்.
சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் ஒன்று. இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் சூர்யா கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ரஜிஷா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, தமிழில் ரஜிஷா விஜயனுக்குப் பல்வேறு வாய்ப்புகள் வருகின்றன.
சமீபத்தில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2டி நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.