சுதந்திரக் கட்சியில் இருந்து தூக்கப்படுகிறார் சந்திரிகா – மைத்ரி அதிரடி !
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் குமார் வெல்கம எம் பி உட்பட்டோரின் கட்சி உறுப்புரிமைகளை ரத்துச் செய்யும் தீர்மானம் இங்கு எடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது..
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முடிவெடுத்த நிலையில், அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
அத்துடன், ‘ சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு’ எனும் இயக்கத்தை உருவாக்கி, எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் விசேட மாநாடொன்றையும் நடத்தவுள்ளனர்.
அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் அன்று மாலை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்தது.
சந்திரிகாவின் நடவடிக்கைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதென இந்த சந்திப்பில் பசில் ஜனாதிபதியிடம் கூறியதாக அறியமுடிந்தது.