சுகாதார விதிமுறைகளை மீறிய 3 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை
சுகாதார விதிமுறைகளை மீறி அப்புத்தளை பகுதியில் இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இன்றைய தினம் திடீர் சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், மேலும் 16 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.