சிக்கலில் லிட்ரோ எரிவாயு நிறுவனம்!
அரசுக்கு சொந்தமான லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், சிரேஷ்ட லிட்ரோ அதிகாரிகள் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (SLIC) பிரதிநிதிகள் ஆகியோருக்கு கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது.
கோப் குழுவில் (COPE) எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த அனைவரையும் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் 280,000 மெற்றிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்ரோலிய எரிவாயு (எல்பிஜி) கொள்முதலின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிகார் கோப் குழுவிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.