சாதனை வெற்றியை பதிவு செய்தது ஆப்கான்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.
224 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அணி இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து, 342 ஓட்டங்களையும், பங்களாதேஷ் 205 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.
பின்னர் தனது இரண்டாவது இனிங்ஸில், ஆப்கானிஸ்தான் 260 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, பங்களாதேஷக்கு 398 மிகப்பெரிய ஒட்ட எண்ணிக்கை, வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, தோல்வியைத் தழுவியது.
முதல் இனிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுளையும், வீழ்த்தியதோடு, ஒரு அரைச்சதத்தையும் பெற்ற ஆப்கானிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் ரஷீட் கான் ஆட்டநாயகனாக தெரிவானார்.