சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க தீர்மானம்
சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளாா்.
இதுதொடர்பில் விளக்கமளித்த அவர் வெளியிடுள்ள ட்விட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
அனைத்து புலம்பெயர்ந்த இலங்கை மக்கள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழி முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் அவர் கோரியுள்ளாா்.