கொழும்பில் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 சிறார்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.
நாளொன்றிற்கு சுமார் 10 சிறார்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறு அனுமதிக்கப்படும் சிறார்களை விசேட வைத்தியர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தி, வைத்திய ஆலோசனைக்கு அமைய, வீடுகளிலிருந்து சிகிச்சை பெறுவதற்கு அனுமதிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் தொற்றுக்குள்ளான ஒரு குழந்தை மாத்திரம், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.