கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா தொற்று உறுதியான மேலும் 222 பேர் இன்று (07) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று கொவிட் தொற்றாளர்கள் 526 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 748 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 567,697 ஆக அதிகரித்துள்ளது.