கொரோனா தகவல்களை வெளியிட்ட சீன ஊடகவியலாளருக்கு நேர்ந்த பரிதாபம்
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை வெளியிட்ட சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸங் ஸான் என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சச்சரவுகளைத் தேர்ந்தெடுத்தல், சிக்கல்கலைத் தூண்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில், ,வூஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் பரவியமை குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பலர் சிறைபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரது ஊடக அடையாள அட்டை பறிக்கப்பட்டு அவர்களது கடமைக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வூஹானின் உண்மை நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிட்டமைக்காக இந்தப் பெண் ஊடகவியலாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது குறித்த ஊடகவியலாளர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.