கொரோனா தொற்றுக்குள்ளான தாயும் மகளும் தப்பியோட்டம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தாய் மற்றும் அவரது மகளும் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியுள்ளனா்.
காய்ச்சல் மற்றும் தடுமல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இன்று (09) வருகை தந்த 31 வயதுடைய தாயும் அவரது 10 வயதான மகளுக்கும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
சிகிச்சைக்காக வாா்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு நோயாளர்கள் அனுமதிக்கும் அறைக்கு முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்திருந்த நிலையில், சிற்றூழியர் அழைத்துச் செல்வதற்காக நோயாளியை தேடியபோது தாயும் மகளும் வைத்தியசாலையை விட்டு தப்பியோடியுள்ளனா்.
குறித்த இருவரும் சீனக்குடா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.
(அப்துல்சலாம் யாசீம்)