கொக்கெய்ன் வில்லைகளை விழுங்கிய நிலையில் பிரேஸில் பெண் கைது !
கொக்கெய்ன் போதை மாத்திரைகளை மறைவாக கொண்டுவந்த பிரேஸில் பிரஜையான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சுங்க அதிகாரிகள் விசாரணைக்கு முன்னர் அவர் அந்த மாத்திரைகளை விழுங்கியதையடுத்து அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பின்னர் அவரிடம் இருந்து 52 மாத்திரைகள் இதுவரை வெளியில் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் தொடர்கின்றன.