“கேபிள் கார்” திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை
நானுஓயாவில் இருந்து நுவரெலியா வரையிலான கேபிள் கார் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கான குழு கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.