குடிசை வீட்டிலிருந்து ஒரு தொகை ஹெரோயின் கண்டுபிடிப்பு
கொழும்பு மத்திய குற்ற புலனாய்வு பிரிவு நடத்திய சோதனையின் போது 1 கிலோ 70 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை குடிசை வீட்டு தொகுதியில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹெரோயின் தொகை மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அது இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.