கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபான விற்பனைக்கு அனுமதி கோரும் சுற்றுலா அமைச்சு
கிறிஸ்மஸ் தினத்தன்று சுற்றுலா சபையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு இலங்கை சுற்றுலா அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
சுற்றுலாத்துறை மேம்பாட்டை கருத்திற் கொண்டு இவ்வாறு மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.