கிறிஸ்தவ தேவாலய கைக்குண்டு விவகாரம்- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டொன்று கிடைத்தமையினால், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.
கண்டி – மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை இன்று (15) சந்தித்து, ஆசிப் பெற்றதை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் லங்கா ஹொஸ்பிட்டல் வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.