கிணற்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு-மல்லாவி, தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸபராஜ்(23) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
தனது வீட்டு வளவிலுள்ள கிணற்றிலிருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சம்பவம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.