காணாமல் போன சிறுமிகள் – வீடியோவை வெளியிட்டது பொலிஸ் (Video)
கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளமை குறித்து விசாரிக்கும் பொலிஸ் அந்த சிறுமிகள் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் ஒருவர் கம்பளை பகுதியில் இருந்து வந்த உறவுமுறை சகோதரியாவார்.
பாத்திமா ரக்ஸா ,பாத்திமா கதீரா , பாத்திமா வார்யா ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
Update news: கொழும்பில் காணாமல் போன சிறுமியர் தொடர்பில் தீவிர விசாரணை
கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியர்கள் மூவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸாா் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.
குறித்த மூன்று சிறுமியர்களும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதுதொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றத்துக்கு பொலிஸாா் அறிவித்துள்ளனா்.