கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் – நாளை ரணில் தலைமையில் விசேட கூட்டம் !
முக்கியமான பல விடயங்கள் குறித்து முஸ்லிம் எம் பிக்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்ட பேச்சுக்களை நடத்தினர். அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.
மதரஸா கல்வி விடயம் , கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்களை விரைவில் விடுதலை செய்தல், கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் நிரபராதிகள் என்று கருதப்படும் இளைஞர்களை விரைவில் விடுதலை செய்ய ஆவண செய்வதாக பிரதமர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. நாளை பொதுநிர்வாக அமைச்சர் – தமிழ்க் கூட்டமைப்பு எம் பிக்கள் – கிழக்கு மாகாண முஸ்லிம் எம் பிக்கள் அனைவரையும் பேச்சுக்கு அழைத்த பிரதமர் அதன்போது இறுதி முடிவை எடுக்கலாமென குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் எம் பிக்கள் அமைச்சுப் பொறுப்புகளை மீள எடுப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவில்லை.